2012-07-12 15:09:20

பிரம்மபுத்ராவில் மிதக்கும் மருத்துவமனைகள்


ஜூலை,12,2012 மருந்துகள் வழங்குவதும், சிகிச்சை அளிப்பதும் மட்டும் எங்கள் பணி அல்ல, மாறாக, உடல்நலக் குறைவைப் பற்றி மக்கள் கொண்டிருக்கும் தவறான எண்ணங்களைக் களையும் வகையில் அவர்களுக்குத் தகுந்த கல்வி புகட்டுவதும் எங்கள் பணி என்று இளம் மருத்துவர் Minhazuddin Ahmed கூறினார்.
ஆசியாவின் பெரும் நதிகளில் ஒன்றான பிரம்மபுத்ராவின் நடுவிலும், அதைச் சுற்றிலும் வாழும் மக்களுக்கு உதவிகள் செய்யும் மருத்துவ மனைகள் படகுகள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. இவை நதியின் வழியே சென்று மக்களுக்குப் பணிகள் புரிந்து வருகின்றன.
படகு மருத்துவமனையில் பணிபுரியும் இளம் மருத்துவர்களான Bedanta Sarma, Minhazuddin Ahmed என்ர இருவரும் யாராலும் சென்றடைய முடியாத கடினமான பகுதிகளில் மருத்துவ உதவிகள் செய்து வருகின்றனர்.
ஐ.நா.வின் கல்வி, கலாச்சார அமைப்பான UNICEFம், அஸ்ஸாம் அரசு நலத்துறையும் 2005ம் ஆண்டு முதல் இணைந்து நடத்தும் இந்த முயற்சியால், 13 மாவட்டங்களில் உள்ள 8 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் 15 மிதக்கும் மருத்துவமனைகள் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
இப்பணியால், அப்பகுதியில் ஆயிரக்கணக்கான வறியோர் பயனடைந்து வருகின்றனர், முக்கியமாக, மழைக் காலங்களில் பிரம்மபுத்ரா வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் வேளையில் இம்மக்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைப்பது மிக அரிதாகி விடுவதால், இந்த மிதக்கும் மருத்துவமனையை மக்கள் ஒரு பெரும் கொடையாகக் கருதுகின்றனர் என்று UCA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.