2012-07-11 15:26:33

கவிதைக்கனவுகள்....... வாழ்க்கை பற்றிய உண்மை - ஓர் ஆங்கிலக் கவிதையின் தழுவல்


நான் வாழ்க்கையில் வெற்றியடைய
கடவுளிடம் வலிமை கேட்டேன் - ஆனால்
நான் தாழ்மையுடன் பணிவைக் கற்றுக் கொள்வதற்காக....
நான் பலவீனனாக ஆக்கப்பட்டேன்

நான் அரும்பெரும் காரியங்களைச் செய்வதற்காக
நல்ல உடல்நலம் கேட்டேன் – ஆனால்
நான் நேர்த்தியான காரியங்களைச் செய்வதற்காக
நான் நோயாளியாக்கப்பட்டேன்

நான் மகிழ்ச்சியாக இருப்பதற்காக
செல்வங்களைக் கேட்டேன் – ஆனால்
நான் ஞானமுள்ளவனாக ஆவதற்காக
நான் ஏழையாக்கப்பட்டேன்.

நான் பிறரின் புகழ்ச்சிகளைப் பெறுவதற்காக
அதிகாரத்தைக் கேட்டேன் – ஆனால்
நான் கடவுளின் தேவையை உணருவதற்காக
நான் பலவீனன் ஆக்கப்பட்டேன்

நான் வாழ்வை அனுபவிப்பதற்காக
எல்லாப் பொருள்களையும் கேட்டேன் – ஆனால்
நான் எல்லாவற்றையும் அனுபவிப்பதற்காக
எனக்கு வாழ்வு அளிக்கப்பட்டது

இந்த உண்மையை அறியாது உலகை வெற்றி கொள்ள முயலுவோர் போக்கை இப்படிச் சித்தரிக்கிறது பகவத்கீதை வெண்பா
நினைத்ததை அடைந்தேன் இன்று, நில்லேன், வேறொன்றை
நினைத்து அதை அடைவேன், இன்னும் நிசம் காண்- எனக்கோ
அதுவுண்டு இதுவுண்டு, எது பெரிது எங்குண்டோ
அதுவும் எனக்கே உடைமையாம் (16:13 )
எண்ணம் பல மனதில், என்றும் ஒரே குழப்பம்
மண்ணில் மயக்க வலைப்பட்டே- கண் தெரியார்
ஆழ்வர், இவர் காம அனுபவத்திற் சிக்குண்பார்
பாழ் நரகமே சம்பளம். (16: 16)








All the contents on this site are copyrighted ©.