2012-07-06 16:02:17

மங்கோலியாத் திருஅவை தனது 20ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கின்றது


ஜூலை06,2012. மங்கோலியாவில் கத்தோலிக்க சமுதாயம் மிகச் சிறியதாக இருந்தாலும், இறைவன் தனக்குச் செய்த மாபெரும் செயல்களை நினைத்து அச்சமுதாயம் நன்றி கூறுகின்றது என்று Ulaanbaatar அப்போஸ்தலிக்க முதல்வர் ஆயர் Wenceslao Padilla கூறினார்.
மங்கோலியாவில் முதல் கத்தோலிக்க மறைப்பணித்தளம் ஆரம்பிக்கப்பட்டதன் 20ம் ஆண்டைக் கொண்டாடுவதற்கானத் தயாரிப்பின் போது இவ்வாறு கூறினார் அவர்.
இம்மாதம் 10, 11 தேதிகளில் நடைபெறவிருக்கும் இவ்விழாவில் விசுவாசப்பரப்புப் பேராயச் செயலர் பேரருட்திரு Taifai Savio Hon, கொரியாவின் Daejeon ஆயர் Lazzaro You Heung-sik ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
மங்கோலியாவில் முதல் மறைப்பணித்தளம் 1992ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. மரியின் திருஇதய சபையின் இரண்டு சகோதரர்கள் முதலில் அங்குச் சென்றனர். தற்சமயம் அந்நாட்டில் 18 நாடுகளைச் சேர்ந்த 64 மறைப்பணியாளர்கள் உள்ளனர். கத்தோலிக்கரின் எண்ணிக்கையும் 415 ஐ எட்டியுள்ளது. 4 பங்குத்தளங்களும் உள்ளன.







All the contents on this site are copyrighted ©.