2012-07-06 15:58:29

சிரியாவில் எடுக்கப்பட்டு வரும் அமைதிக்கான அனைத்து முயற்சிகளும் போரை நிறுத்தும் நோக்கம் கொண்டவை - திருப்பீடத் தூதர்


ஜூலை06,2012. சிரியா மக்களின் அமைதி மற்றும் ஒப்புரவுக்காக எடுக்கப்பட்டு வரும் அனைத்து முயற்சிகளுக்கும் அனைத்துலக சமுதாயம் ஆதரவு வழங்க வேண்டுமென்று அந்நாட்டுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari கேட்டுக் கொண்டார்.
ஐ.நா.பாதுகாப்பு அவை, அரபுக் கூட்டமைப்பு மற்றும் சிரியாவின் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் ஜெனீவாவிலும் கெய்ரோவிலும் அண்மையில் நடத்திய கூட்டங்கள் குறித்துப் பேசிய பேராயர் Zenari, சிரியாவில் வன்முறைகள் தொடர்ந்து இடம்பெறுவதால் நேரத்தை வீணாக்காமல் அமைதிக்கான முயற்சிகளில் ஈடுபடுமாறு உலக சமுதாயத்தை வலியுறுத்தினார்.
வன்முறையை நிறுத்தி உரையாடலைத் தொடங்குவதே இந்த முயற்சியின் முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டுமென்றும் பேராயர் கூறினார்.
ஹோம்ஸ் நகரில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் பல வாரங்களாக முடங்கிக் கிடக்கின்றன, இக்குடும்பங்களுக்குத் தேவையான அடிப்படை மனிதாபிமான உதவிகளாவது வழங்கப்படுமாறும் பேராயர் கேட்டுக் கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.