2012-07-05 16:25:22

பேராயர் Desmond Tutuவுக்கு பெத்லகேம் கடவுச்சீட்டு வழங்கப்பட்டது


ஜூலை,05,2012. என் மீட்பரும் ஆண்டவருமான இயேசு பிறந்த இடத்தைக் காண எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை நான் ஒரு பெரும் வரமாகக் கருதுகிறேன், இதே வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கும் காலம் விரைவில் வரவேண்டும் என்று Anglican பேராயர் Desmond Tutu கூறினார்.
பெத்லேகேம் வரவேற்கிறது என்ற பொருள்படும் Open Bethlehem என்ற ஓர் முயற்சியின் விளைவாக, உலகில் அமைதிக்காகப் போராடும் பல உலகத் தலைவர்களுக்கு பெத்லகேம் கடவுச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. பெத்லகேமின் முதல் கடவுச்சீட்டு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு பாலஸ்தீனியத் தலைவர் Mahmoud Abbas அவர்களால் 2005ம் ஆண்டு வழங்கப்பட்டது.
அமைதிக்கான நொபெல் பரிசு பெற்ற Anglican பேராயர் Desmond Tutu அவர்களுக்கு இந்தக் கடவுச்சீட்டு இப்புதனன்று வழங்கப்பட்டது.
தீரவே தீராது என்று எண்ணப்பட்ட தென் ஆப்ரிக்காவின் இனவெறி தீர்ந்தது, இரண்டாம் உலகப் போரின்போது யூதர்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடுமைகள் தீராது என்று எண்ணியபோது, அதுவும் தீர்ந்தது என்று எடுத்துரைத்த பேராயர் Tutu, இதேபோல், தற்போது தீராததாய் தெரியும் இஸ்ரேல் பாலஸ்தீனியப் பிரச்சனையும் ஒரு நாள் கட்டாயம் தீரும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார்.








All the contents on this site are copyrighted ©.