2012-07-04 15:45:20

உரோம் நகரில் அனைத்துலக கத்தோலிக்கத் திரைப்பட விழா


ஜூலை,04,2012. "சினிமாவும் புதிய நற்செய்திபரப்புப் பணியும்" என்ற தலைப்பில் இத்திங்கள் முதல் வியாழன் வரை உரோம் நகரில் அனைத்துலக கத்தோலிக்கத் திரைப்பட விழா ஒன்று நடைபெற்று வருகிறது.
திருப்பீடக் கலாச்சார அவையும், திருப்பீட புதிய நற்செய்திப் பணி அவையும் இணைந்து நடத்தும் இந்த விழாவில் உலகின் பல நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
கலைகள் புத்துயிர் பெற்ற Renaissance காலத்தில், ஓவியங்கள் வழியே கிறிஸ்தவம் பரவியதுபோல், இன்றையச் சூழலில் திரைப்படங்கள் வழியே கிறிஸ்தவ உண்மைகள் எளிதில் மக்களைச் சென்றடைய முடியும் என்று இந்த விழாவினை உருவாக்கிய Laura Marabini கூறினார்.
உரோம் நகரை அடுத்து, இவ்வாண்டும், அடுத்த ஆண்டும் Vienna, Los Angeles, Toronto, Rio de Janeiro ஆகிய நகரங்களில் இவ்விழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.