2012-06-30 15:42:01

அர்ஜென்டினா அரசியல் தலைவர்களிடம் நேர்மை தேவை, பேராயர் வலியுறுத்தல்


ஜூன்30,2012. ஒரு நாட்டில் அதிகாரத்தில் இருப்பவர்கள் பொய் சொல்லிக் கொண்டிருக்கும்போது அந்நாட்டிலுள்ள சமுதாயம் மிகக் கடுமையாய்ப் பாதிக்கப்படும் என்று அர்ஜென்டினா பேராயர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
“நல்லதோர் உலகை அமைத்தல்” என்ற தனது திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய அர்ஜென்டினாவின் La Plata பேராயர் Hector Aguer, பரஸ்பர நம்பிக்கையும் உண்மையும் இன்றி மக்கள் இணைந்து வாழ முடியாது என்ற புனித Thomas Aquinasன் கூற்றையும் சுட்டிக் காட்டினார்.
பொய்ப் பெருமளவில் சொல்லப்படும்பொழுது, அதிலும் குறிப்பாக, பெரும் பொறுப்பிலுள்ளவர்கள் கூறும்பொழுது அது சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் பெரும் கேட்டை விளைவிக்கும் என்றும் பேராயர் எச்சரித்தார்.
உண்மை, மறுதலிக்கப்படமுடியாத விழுமியம் என்றும், பொய் பேசுதல், கிறிஸ்தவ அறநெறிப்படி தன்னிலே பாவமாகும் என்றும் பேராயர் குறிப்பிட்டார்.







All the contents on this site are copyrighted ©.