2012-06-27 17:03:14

போதைப்பொருள்களுக்கு அடிமையாவது குணப்படுத்தக்கூடிய ஒரு நோய் - உலக நலவாழ்வு நிறுவனத்தின் உயர் அதிகாரி


ஜூன்,27,2012. போதைப்பொருள்களுக்கு அடிமையாவது, குணப்படுத்தக்கூடிய ஒரு நோய் என்றாலும், இந்த நோயைக் குணப்படுத்தும் வழிமுறைகள் பல நாடுகளில் பயன்படுத்தப் படுவதில்லை என்று WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜூன் 26 , இச்செவ்வாயன்று போதைப்பொருள் மற்றும் சட்ட விரோதக் கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டதையொட்டி பேசிய WHO அதிகாரி Shekhar Saxena, 147 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையைச் செய்தியாளர்களிடம் சமர்ப்பித்தார்.
2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, உலக மக்கள் தொகையில் 5 விழுக்காட்டினர், அதாவது 23 கோடி மக்கள், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை ஒரு முறையாகிலும் பயன்படுத்தியுள்ளனர் என்றும், இவர்களில் 2 கோடியே 70 இலட்சம் பேர் போதைப்பொருள் பயன்பாட்டில் சிக்கியுள்ளனர் என்றும் தெரிகிறது.
போதைப்பொருள் பயன்பாட்டை பல நாடுகள் ஒரு சமுதாய அவலமாகக் கருதுவதோடு நின்றுவிடுகின்றன என்றும், அந்த பழக்கத்தை ஒரு நோயாகக் கருதி, மாற்று வழிகளைத் தருவதில்லை என்றும் இவ்வறிக்கை எடுத்துரைக்கிறது.








All the contents on this site are copyrighted ©.