2012-06-26 16:48:57

குழந்தைகள் அதிகம் உள்ள குடும்பங்களைத் தண்டிக்கும் வகையில் பிரித்தானிய அரசு செயல்படுவது மிகுந்த கவலை அளிக்கிறது - கத்தோலிக்கத் திருஅவை


ஜூன்,26,2012. இங்கிலாந்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையையும் காக்கும் வழிகளை உருவாக்குவதற்குப் பதிலாக, குழந்தைகள் அதிகம் உள்ள குடும்பங்களைத் தண்டிக்கும் வகையில் பிரித்தானிய அரசு செயல்படுவது மிகுந்த கவலை அளிக்கிறது என்று கத்தோலிக்கத் திருஅவை கூறியுள்ளது.
இலவசமாகக் கிடைத்துவரும் நலவாழ்வுச் சலுகைகளைக் குறைக்கப்போவதாக, இத்திங்களன்று பிரித்தானிய பாராளு மன்றத்தில் பிரதமர் David Cameron கூறியதைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் உள்ள காரித்தாஸ் அமைப்பு தன் கவலையை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே தங்கள் நாடு பொருளாதாரச் சரிவினால் இன்னல்களைச் சந்தித்துவரும் வேளையில், பிரதமர் கூறியுள்ள ஆலோசனைகள் பெரும் குடும்பங்களை இன்னும் அதிகம் பாதிக்கும் என்று காரித்தாஸ் கருத்து வெளியிட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் 80,000க்கும் அதிகமான இளையோர் வீடின்றி தெருக்களிலும், சாலைகளிலும் தங்க வேண்டியுள்ளது என்று கூறும் Depaul UK என்ற ஒரு பிறரன்பு நிறுவனம், பிரதமர் கூறியுள்ள ஆலோசனைகள் வீடின்றி தவிக்கும் இளையோரை அதிக அளவில் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.