2012-06-21 16:11:10

பாகிஸ்தான் அரசியல் நிலைகுறித்து தலத் திருஅவை கவலை


ஜூன்,21,2012. நீதியையும் முன்னேற்றத்தையும் நிலைநிறுத்த பாகிஸ்தானில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து வருவதே நாட்டின் தற்போதைய அவசரமானத் தேவை என்று இஸ்லாமாபாத் ஆயர் Rufin Anthony கூறினார்.
பாகிஸ்தான் பிரதமர் Yousaf Raza Gilani பதவியில் நீடிக்கமுடியாது என்று பாகிஸ்தான் உச்ச நீதி மன்றம் ஆணையிட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பதட்டமானச் சூழலைக் குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் ஆயர் Anthony இவ்வாறு கூறினார்.
மக்களின் உணவு, நீர், கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதும், நாட்டில் வளர்ந்துள்ள ஊழலை ஒழிப்பதும் இன்றைய அவசரமானத் தேவைகள் என்றும், யார் பெரியவர் என்ற போட்டி முக்கியமல்ல என்றும் ஆயர் Anthony எடுத்துரைத்தார்.
பல ஆண்டுகள் பாடுபட்டு இந்நாடு பெற்றுள்ள மக்களாட்சியை நிலைநிறுத்த வேண்டுமெனில், அரசு புதியப் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் உடனடியாகச் செயல்பட வேண்டுமென்று பாகிஸ்தான் ஆயர் பேரவை நீதி, அமைதி பணிக்குழுவின் இயக்குனர் அருள்தந்தை Emmanuel Yousaf Mani, UCAN செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.








All the contents on this site are copyrighted ©.