2012-06-21 15:53:26

கவிதைக் கனவுகள் .... தாய்


கவிதைகளில் அழகியவர் தாய்
கவிதைகளில் ஆனந்தமூட்டுபவர் தாய்
கவிதைகளில் இரசிக்கப்படுபவர் தாய்
கவிதைகளில் ஈர்க்கப்படுபவர் தாய்
கவிதைகளில் உயர்த்தப்படுபவர் தாய்
கவிதைகளில் ஊற்றெடுப்பவர் தாய்
கவிதைகளில் எண்ணிக்கையைக் கடந்தவர் தாய்
கவிதைகளில் ஏற்றம் பெறுபவர் தாய்
கவிதைகளில் ஐயமகற்றுபவர் தாய்
கவிதைகளில் ஒலிக்கப்படுபவர் தாய்
கவிதைகளில் ஓங்கி நிற்பவர் தாய்
நீர் சுமக்கும் தாயை நதி என்றான் தமிழன்.
இரவையும் பகலாக்கும் தாயைக் கதிரவன்
என்று சொன்னது எனது உள்ளம்.
தனக்கு உதவாத கதிரவன்
பிறர்க்கென்றே வாழ்கிறான்.
பிறர்க்கென்றே வாழும் கதிரவன் தாய்.
தனக்கென வாழாத தெய்வம் தாய்.
தலையணைகள் ஆயிரமிருந்தும்
தாய்மடியில் தலைவைத்து சுகம் காணும்போதெல்லாம்
தாய்மடி தரும் சுகம் தனியின்பமே.







All the contents on this site are copyrighted ©.