2012-06-21 16:11:45

Rio+20 பூமிக்கோள உச்சி மாநாட்டிற்கு இணையாக நடைபெற்று வரும் People’s Summit


ஜூன்,21,2012. உலகின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது அரசுத் தலைவர்களுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் உள்ள ஒரு கடமை என்று மக்கள் இயக்கத் தலைவர் ஒருவர் கூறினார்.
பிரேசில் நாட்டில் இப்புதனன்று துவங்கியுள்ள Rio+20 பூமிக்கோள உச்சி மாநாட்டிற்கு இணையாக அந்நகரின் Flamengo பூங்காவில் நடைபெற்று வரும் People’s Summit என்றழைக்கப்படும் மக்கள் உச்சிமாநாட்டின் அமைப்பாளர்களில் ஒருவரான Rafael Soares de Oliveira இவ்வாறு கூறினார்.
பல்வேறு மக்கள் இயக்கங்கள், சமுதாய நல அமைப்புக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புக்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் மக்கள் உச்சி மாநாடு, 1992ம் ஆண்டிலும் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற பூமிக்கோள உச்சிமாநாட்டுக்கு இணையாக நடத்தப்பட்டது.
1992ம் ஆண்டு கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை விட இம்முறை இரு மடங்காக 18000க்கும் அதிகமானோர் மக்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்புதனன்று ஆரம்பமான Rio+20 பூமிக்கோள உச்சி மாநாடு, இவ்வெள்ளியன்று நிறைவடைகிறது.








All the contents on this site are copyrighted ©.