2012-06-16 16:07:34

ஜி20 மாநாட்டில் உணவுப் பாதுகாப்பின்மை குறித்து விவாதிக்கப்பட வேண்டும் – CIDSE கூட்டமைப்பு வலியுறுத்தல்


ஜூன்16,2012. வருகிற திங்களன்று மெக்சிகோவில் G20 நாடுகளின் தலைவர்கள் இரண்டு நாள் மாநாட்டை நடத்தவிருக்கும்வேளை, உலகில் தற்போது நிலவி வரும் உணவுப் பாதுகாப்பின்மை குறித்த விவகாரம் இம்மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டுமென்று CIDSE என்ற கத்தோலிக்க வளர்ச்சித்திட்ட நிறுவனங்களின் கூட்டமைப்பு கேட்டுள்ளது.
சமத்துவமின்மையைக் குறைத்து உறுதியான வளர்ச்சியை ஊக்குவித்தல் குறித்து இந்த G20 மாநாட்டில் முக்கிய இடம்பெறுவதன் மூலம் உணவுப் பாதுகாப்பின்மையை குறுகிய காலத்துக்கும் நீண்ட காலத்துக்கும் குறைக்க முடியும் என்று CIDSE கூட்டமைப்பு கூறியது.
பசிப் பிரச்சனையும், மக்கள் ஓரங்கட்டப்படுதலும், பொருளாதார ரீதியாக ஒதுக்கப்படுவதும் அகற்றப்படுவதைத் தாங்கள் எதிர்பார்ப்பதாக இந்தக் கூட்டமைப்பின் உணவு மற்றும் வேளாண்மைக்கான ஆலோசகர் Gisele Henriques கூறினார்.
G20 நாடுகளின் மெக்சிகோ மாநாடு, ஜூன் 18,19 தேதிகளில் நடைபெறவிருக்கின்றது.








All the contents on this site are copyrighted ©.