2012-06-14 16:56:13

வருகிற சனிக்கிழமையன்று, உலக அமைதிக்கான நொபெல் பரிசை 20 ஆண்டுகளுக்கு முன் வென்ற Aung San Suu Kyi யின் ஏற்புரை


ஜூன்,14,2012. தனது ஐரோப்பியப் பயணம் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாகத் தன் வாழ்வில் இருக்கும் என்று மியான்மார் எதிர்கட்சித் தலைவர் Aung San Suu Kyi கூறினார்.
1980களில் ஐரோப்பிய நாடுகளில் தங்கி பயின்று வந்த Suu Kyi, 24 ஆண்டுகளுக்குப் பின் ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளும் பயணத்தின் முதல் படியாக, இச்செவ்வாய் மாலை சுவிட்சர்லாந்து சென்றடைந்தார்.
இராணுவ ஆட்சியிலிருந்து மக்களாட்சி நோக்கி முன்னேறிவரும் மியான்மார் வரலாற்றில், Suu Kyi ஐரோப்பாவில் மேற்கொண்டு வரும் பயணங்கள் முக்கியமான தருணம் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
1991ம் ஆண்டு உலக அமைதிக்கான நொபெல் பரிசை வென்ற Suu Kyi, அவ்வேளை வழங்கமுடியாத ஏற்புரையை வருகிற சனிக்கிழமையன்று நார்வே நாட்டின் Oslo நகரில் வழங்குவார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
17 நாட்கள் தொடரும் Suu Kyiயின் இப்பயணத்தின்போது பிரான்ஸ், அயர்லாந்து, ஆகிய நாடுகளுக்கும் சென்று, இறுதியில் அவர் இங்கிலாந்து செல்வார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.