2012-06-09 15:03:05

நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கு நோய்களைத் தடுத்து நிறுத்தினால் இலட்சக்கணக்கான சிறாரின் வாழ்வைப் பாதுகாக்க முடியும் - யுனிசெப்


ஜூன்09,2012. ஐந்து வயதுக்குட்பட்ட சிறாரின் இறப்புக்கு முக்கிய காரணங்களாக இருக்கும் நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கு நோய்களைத் தடுத்து நிறுத்தினால் உலகில் இருபது இலட்சத்துக்கு மேற்பட்ட சிறாரின் வாழ்வைப் பாதுகாக்க முடியும் என்று யுனிசெப் என்ற ஐ.நா.வின் குழந்தைநல அமைப்பு வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகிறது.
சிறாரின் உயிர்வாழ்க்கைக்கு மிகப்பெரும் தடைகளாக இருக்கும் இவ்விரண்டு நோய்களைக் கட்டுப்படுத்தினால் ஒவ்வொரு குழந்தையும் வளர்வதற்கு வாயப்பளிக்க முடியும் என்று யுனிசெப் இயக்குனர் Anthony Lake கூறினார்.
உலகில் இடம்பெறும் ஐந்து வயதுக்குட்பட்ட சிறாரின் இறப்பில் மூன்றில் ஒரு பகுதி இறப்புக்கு இவ்விரு நோய்களுமே காரணம் என்றும், இவ்விறப்புக்களில் சுமார் 90 விழுக்காடு ஆப்ரிக்காவின் சகாராவையடுத்த பகுதிகள் மற்றும் தெற்கு ஆசியாவில் இடம்பெறுகின்றன என்றும் Anthony Lake மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.