2012-06-08 16:51:17

நதிகளை இணைத்தால் தண்ணீர் பிரச்சனையைத் தடுக்கலாம்: அப்துல் கலாம்


ஜூன்,08,2012. எதிர்காலத்தில் தண்ணீருக்காக பெரும் பிரச்சனை உருவாகும். இதனை தவிர்க்க முதலில் நம்மை சுற்றியுள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை இணைப்பதற்கும், நாடு முழுவதும் உள்ள ஆறுகளை இணைப்பதற்கும் நாம் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். என இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
இவ்வியாழனன்று கடலூர் மாவட்டம் நெய்வேலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அப்துல் கலாம், அங்குள்ள தேசிய லிக்னைட் நிறுவனத்தின் அரங்கில் உரையாற்றியபோது, இவ்வாறு கூறினார்.
பசுமையான, இருள் அகன்ற தமிழகமே தனது ஆசை என்று கூறிய முன்னாள் குடியரசுத் தலைவர், நாட்டில் மின்பற்றாக்குறையைப் போக்க மரபுசாரா எரிசக்திகளைப் பயன்படுத்தவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.