2012-06-05 15:20:29

கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியார் ஆலயப் பகுதியைப் புனித பூமியாக அறிவிக்க மாநகர சபை முடிவு


ஜூன்,05,2012. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலயம் மற்றும் அதைச்சுற்றியுள்ளப் பகுதியை புனித பூமியாக அறிவிக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் கொழும்பு மாநகர சபையில் முன்வைத்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேயர் ஏ. ஜே. எம். முஸம்மில் தலைமையில் கூடிய கொழும்பு மாநகர சபையின் அண்மை மாதக் கூட்டத்தில், புனித பூமி அறிவிப்புக்கான தீர்மானத்தை முன்வைத்து உரையாற்றிய உறுப்பினர் அநுர சுஜீவ, இலங்கைவாழ் கிறிஸ்தவ மக்களின் வணக்கத்திற்கும் பக்திக்கும் உரித்தான புனிதஅந்தோணியார் ஆலயத்தையும் அதனைச் சுற்றியுள்ள பகுதியையும் புனித பூமியாக அறிவிக்க வேண்டும் என விண்ணப்பித்தார்.
இவ்வறிவிப்பினால் அப்பகுதியில் உள்ள ஏனைய மத்த் தலங்களுக்கு பாதிப்பு ஏற்படாது, மற்றும் அம்மத்த் தலங்களும் புனித பூமியில் அங்கமாக்கப்படும் என தெரிவித்துள்ளார் அவர்.
இம்மாதம் 13ம் தேதி அந்தோணியார் ஆலயத் திருவிழா இடம் பெறவுள்ளதால், அதற்கு அப்பகுதி பாதைகளைச் செப்பனிட்டுத் தருமாறும் உறுப்பினர் அநுர சுஜீவ குமார வேண்டுகோள் விடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.