2012-06-05 15:20:17

இயேசுவின் வாழ்வைக் குறித்த முதல் முப்பரிமாணத் திரைப்படம் இந்தியாவில்


ஜூன்,05,2012. இயேசுவின் வாழ்வைக் குறித்த முதல் முப்பரிமாண திரைப்படம் மூன்றரை கோடி ருபாய் செலவில் இந்தியாவில் எடுக்கப்படவுள்ளது.
ஒன்பது மொழிகளில் எடுக்கப்படும் இத்திரைப்படம், வரும் மாதம் இறுதியில் துவக்கப்பட்டு, 2013ம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறு முதல், உலகம் முழுவதும் 5,000 திரையரங்குகளில் திரையிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவிலிய வல்லுனர்களுடன் பலச் சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியபின்னர், புதிய ஏற்பாட்டின் அடிப்படையில் இத்திரைப்படத்திற்கான ஆவணங்களை இறுதி முடிவு செய்ய ஏறத்தாழ பத்தாண்டுகள் பிடித்தது என்றார் இதன் தயாரிப்பாளர் Johny Sagarika.
ஆந்திராவின் ஹைதராபாத்தில் உள்ளராமோஜி ராவ் திரைப்படநகரில் இத்திரைப்படம் துவக்கப்பட்டு, சிலகாட்சிகள் எருசலேமிலும், கர்நாடகமாநிலத்திலும் எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
'முப்பது வெள்ளிக் காசுகள்' எனப் பெயரிடப்பட்டுள்ளஇத்திரைப்படத்தில் 300 நடிகர்கள் இடம்பெறவுள்ளதுடன், வெளிநாட்டுத் தொழிநுட்பக் கலைஞர்கள் பலரும் பங்குகொள்வர்.








All the contents on this site are copyrighted ©.