2012-06-04 15:29:41

இரஷ்யாவில் மக்கள் அரசியல் தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்து வந்தாலும், கத்தோலிக்கத் திருஅவை மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்


ஜூன் 04, 2012. இரஷ்யாவில் தற்போது நிலவிவரும் நிலையற்ற அரசியல் சூழலில், மக்கள் அரசியல் தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்து வந்தாலும், கிறிஸ்தவ சபை என்ற அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று இரஷ்யாவில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.
மாஸ்கோவில் பன்முகத் திட்டங்களை ஆய்வு செய்துவரும் ஒரு சமூகவியல் மையம் (Centre for Strategic Studies in Moscow) அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், இரஷ்யாவில் உள்ள ஆர்த்தடாக்ஸ் திருஅவை மட்டுமே நன்னெறி விழுமியங்களின் அடிப்படையில் இயங்கும் ஓர் அமைப்பு என்று மக்கள் கருதுவதாகச் சொல்லப்பட்டுள்ளது.
இரஷ்யாவின் அரசியல் அமைப்பும், பிற சமுதாய அமைப்புக்களும் நன்னெறியினின்று விலகியுள்ளதால், இவ்வமைப்புக்களில் மீண்டும் நன்னெறியை வலியுறுத்தும் சக்திபெற்ற ஒரே அமைப்பாக விளங்குவது தலத் திருஅவையே என்று இந்த ஆய்வு மையத்தின் இயக்குனர் Mikhail Dmitriev கூறினார்.
கத்தோலிக்க ஆர்த்தடாக்ஸ் திருஅவையில் உள்ள ஒரு சில தலைவர்கள் தனிப்பட்ட வகையில் நன்னெறியினின்று தவறி இருந்தாலும், திருஅவை இன்னும் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஓர் அமைப்பாகத் திகழ்கிறது என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.








All the contents on this site are copyrighted ©.