2012-06-01 16:09:42

புகையிலை ஒழிப்புக்கு எதிரான நடவடிக்கையில் தொழிற்சாலைகளின் தாக்குதல்களுக்கு எதிராக செயல்பட ஐ.நா.அழைப்பு


ஜூன்01,2012. உலகில் ஆண்டுதோறும் சுமார் 60 இலட்சம் பேர் இறப்பதற்குக் காரணமாகும் புகையிலைப் பயன்பாட்டைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளைச் செயலிழக்கச் செய்வதற்கு புகையிலைத் தொழிற்சாலைகள் எடுக்கும் கடும் நடவடிக்கைகளை எதிர்க்குமாறு ஐ.நா.அதிகாரிகள் அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மே31, இவ்வியாழனன்று புகையிலை ஒழிப்பு நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் மற்றும் உலக நலவாழ்வு நிறுவன இயக்குனர் இவ்வாறு நாடுகளின் அரசுகளைக் கேட்டுள்ளனர்.
புகையிலைப் பயன்பாட்டைக் குறைக்கவும், மக்களின் நலவாழ்வைப் பாதுகாக்கவும் அரசுகளும் அனைத்துலக நலவாழ்வு சமூகமும் தீவிரமாய் முயற்சித்து வரும்வேளை, தங்களது உற்பத்தியால் மனிதரைக் கொல்லும் தொழிற்சாலைகளால், இம்முயற்சிகள் கடுமையாய் எதிர்க்கப்படுகின்றன என்று கூறியுள்ளார் பான் கி மூன்.
2005ம் ஆண்டில் அமலுக்கு வந்த புகையிலைக் கட்டுபாடு குறித்த ஒப்பந்தம், ஐ.நா.வரலாற்றில் வேகமாக செயலுக்கு வந்த ஒப்பந்தமாக நோக்கப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.