2012-05-31 15:59:52

கவிதைக் கனவுகள் .... செய்யும் தவறு


ஒரு மாலைப்பொழுதில்
சாலையோரம் நடந்து செல்கையில்
இரண்டு மூன்று “குடி”மகன்கள்
ஒருவரையொருவர் கட்டி அணைத்துக் கொண்டு
புரியாத மொழியில் உளறிக் கொண்டிருந்தார்கள்
அருகில் சென்றால் ஒரே சாராய நாற்றம்
குடிபோதையில் ஒருவர் கேட்கிறார்...
ஏப்பா, உன் இரு காதுகளில் இவ்வளவு பெரிய கொப்பளங்கள்
அதுவா எனது மனைவி செய்த குற்றம்.
துணிகளை இஸ்திரி போட்டுட்டு
இஸ்திரிப் பெட்டியின் சூட்டை அணைக்காம
அவ அடுப்படிக்குப் போய்ட்டா
அதை நான் அணைக்கப் போனேன்
அந்த நேரம் பார்த்து தொலைபேசி மணி அடித்தது
இஸ்திரிப் பெட்டியை தொலைபேசியாகப் பயன்படுத்தினேன்
அதுதான் இந்தக் காதில் கொப்பளம்.
அடுத்த காதிலும் கொப்பளம் இருக்கே...
அதுவா, அந்த மடையன் மறுபடியும்
தொலைபேசியில் அழைத்தான்....
பகையைக்கூட புகையாய் ஊதித்தள்ளிவிடும்
மனிதருக்கு மதுவை ஒதுக்க முடியவில்லை.
செய்யும் தவறு தன்னையே தாக்கும் என உணரும் நாள்
தவறுகள் நிறுத்தப்பட்ட நாளாக மனிதருக்கு விடியும்.
இதை மனிதர் உணரும் நேரம்
இந்த வினாடியாக இருக்கக்கூடாதா?








All the contents on this site are copyrighted ©.