2012-05-31 15:52:16

அடிப்படைவாதத்தின் பல்வேறு வடிவங்களையும் புறக்கணித்தால் மட்டுமே ஆப்ரிக்க நாடுகளில் அமைதி உருவாகும் - நைஜீரியப் பேராயர்


மே,31,2012. ஆப்ரிக்கக் கண்டத்தில் உள்ள அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் அடிப்படைவாதத்தின் பல்வேறு வடிவங்களையும் புறக்கணித்தால் மட்டுமே ஆப்ரிக்க நாடுகளில் அமைதி உருவாகும் என்று நைஜீரியாவைச் சேர்ந்த பேராயர் ஒருவர் கூறினார்.
"நைஜீரியாவில் போராட்டமும் அமைதியும் - மதங்களின் பங்கு" என்ற தலைப்பில் ஆப்ரிக்க மதத்தலைவர்களின் அவை நடத்திய ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய இவ்வவையின் தலைவரும் Abujaவின் பேராயருமான John Olorunfemi Onaiyekan, இவ்வாறு கூறினார்.
பல அடிப்படைவாதக் கொள்கைகளால் வன்முறைகள் வளர்ந்துவரும் ஆபிரிக்கச் சூழலில், மதங்களிடையே அடிப்படைவாதத்தின் தாக்கம் ஊடுருவாமல் தடுக்க மத நல்லிணக்கக் குழுக்கள் இன்னும் பல ஆப்ரிக்க நாடுகளில் அமைக்கப்படுவது அவசியம் என்று பேராயர் Onaiyekan எடுத்துரைத்தார்.
இயற்கைப் பேரிடர், பசி, நோய், பொருளாதாரம் என்று ஆப்ரிக்காவைத் தாக்கி வரும் பல்வேறு கொடுமைகளுடன், அடிப்படைவாதத்தால் எழும் வன்முறைகள், பயங்கரவாதத் தாக்குதல்கள் என்ற பிரச்சனைகளையும் நாம் சேர்க்கக்கூடாது என்று பேராயர் Onaiyekan இக்கருத்தரங்கில் அழைப்பு விடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.