2012-05-30 16:05:28

திருத்தூதர்கள் துன்பங்களைத் தாங்கியதைப் போல் ஈராக் திருஅவை தற்போது துன்பங்களைத் தாங்கி வருகிறது - கிர்குக் பேராயர்


மே,30,2012. ஈராக் திருஅவை, திருத்தூதர்களால் உருவாக்கப்பட்டது மட்டுமல்லாமல், அவர்கள் துன்பங்களைத் தாங்கியதைப் போல் இத்திருஅவையும் தற்போது துன்பங்களைத் தாங்கி வருகிறது என்று கிர்குக் பேராயர் லூயிஸ் சாக்கோ கூறினார்.
கிறிஸ்தவ விசுவாசத்தின் காரணமாக, துன்பங்களைத் தாங்கி வரும் ஈராக், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்காக அண்மையில் பிரான்ஸ் நாட்டு பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட ஒரு திருவிழிப்பு செப வழிபாட்டில் உரையாற்றிய பேராயர் சாக்கோ, துன்புறும் கிறிஸ்தவர்களின் இரத்தம் வீணாகாது என்று கூறினார்.
பாகிஸ்தானில் கொலையுண்ட அமைச்சர் Shahbaz Bhattiயின் தம்பி Paul Bhatti, பாகிஸ்தான் சார்பிலும், சீனாவின் சார்பில் ஹாங்காங் முன்னாள் பேராயர் கர்தினால் Joseph Zenம் இச்சிறப்புத் திருவிழிப்புச் சடங்கில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
Aid to the Church in Need என்ற பிறரன்பு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தின் ஆரம்பத்தில் கர்தினால்களும் ஆயர்களும் கலந்து கொண்ட திருப்பலியை பிரான்ஸ் நாட்டுத் திருப்பீடத் தூதர் பேராயர் Luigi Ventura நிறைவேற்றினார்.








All the contents on this site are copyrighted ©.