2012-05-29 15:25:29

ஜம்மு-காஷ்மீர் கிறிஸ்தவர்களை அச்சுறுத்தும் நோக்கிலானதாக்குதல்களை நிறுத்த கோரிக்கை


மே29,2012. கிறிஸ்தவ சமூகத்தை அச்சுறுத்தும் நோக்கில் ஜம்மு-காஷ்மீரில் இடம்பெறும் தாக்குதல்களை நிறுத்த அம்மாநில முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் இந்திய கிறிஸ்தவர்களின் உலக அவையின் தலைவர் Sajan George.
அண்மையில், ஸ்ரீநகரின் திருக்குடும்ப கத்தோலிக்கக் கோவில் தாக்கப்பட்டது குறித்து தன் கருத்துக்களை வெளியிட்ட Sajan George, கிறிஸ்தவர்களின் பாதுகாப்பை வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பையும் உறுதிச் செய்ய வேண்டியது மாநில முதல்வரின் கடமையாகிறது என்றார்.
கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை நானூறைக்கூடத் தாண்டாத ஸ்ரீநகரில், கிறிஸ்தவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் இஸ்லாமிய சமூகம் ஈடுபட்டுவருவது குறித்த கவலையையும் வெளியிட்டார் அவர்.
இதற்கிடையே, கிறிஸ்தவர்களின் மீதான தாக்குதல்கள் தொடர்வதாகவும், சனவரி மாத இறுதியில் தன் இருசக்கர வாகனம் அடையாளம் தெரியாத நபர்களால் எரிக்கப்பட்டதாகவும் உரைத்த திருக்குடும்ப கோவிலின் பங்குதந்தை மேத்யூ தாமஸ், அனைத்துத் தாக்குதல்களும் திரு அவையை அச்சுறுத்தும் நோக்கம் கொண்டதாகவே உள்ளன என்றார்.








All the contents on this site are copyrighted ©.