2012-05-29 15:24:45

சிரியாவின் படுகொலை குறித்து திருப்பீடப் பேச்சாளரின் அறிக்கை


மே29,2012. சிரியாவின் Hula நகரில் ஏறத்தாழ நூறு பேர் படுகொலைச் செய்யப்பட்டது குறித்து திருத்தந்தையும் உலகக் கத்தோலிக்கச் சமுதாயம் முழுமையும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் திருப்பீடப்பேச்சாளர் இயேசு சபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.
அனைத்து விதமான வன்முறைகளும் நிறுத்தப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தை மீண்டும் முன்வைக்கும் திருப்பீடம், ஒப்புரவு மற்றும் பேச்சுவார்த்தைகளின் வழி தீர்வு காண உதவும் அனைத்து வழிகளையும் கையாள வேண்டும் என சர்வதேச சமுதாயத்தை விண்ணப்பிப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார் திருப்பீடப்பேச்சாளர்.
சிரிய மக்கள் அனைவருக்காகச் செபிக்கவும், அமைதியை ஊக்குவிக்க அனைத்துத் தலைவர்களும், மத நம்பிக்கையுள்ள அனைவரும் தங்களால் இயன்ற அனைத்தையும் மேற்கொள்ளவும் வேண்டுமென திருப்பீடம் எதிர்பார்ப்பதாக திருப்பீடப்பேச்சாளர் அருள்தந்தை லொம்பார்தியின் அறிக்கை கூறுகிறது.
சிரியாவில் கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற தாக்குதலில் ஏறத்தாழ 109 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதில் 32 பேர் குழந்தைகள்.








All the contents on this site are copyrighted ©.