2012-05-28 15:57:12

திருமண வாழ்வில் பல ஆண்டுகள் தொடர்ந்து இணைந்து வாழும் 530 தம்பதியருக்கு வெஸ்ட் மின்ஸ்டர் பேராயலயத்தில் பாராட்டு விழா


மே,28,2012. திருமண வாழ்வைக் குறித்து நீங்கள் அளிக்கும் சாட்சி இன்றைய உலகிற்கு மிகவும் தேவையான ஒரு பாடம், இருந்தாலும் இவ்வுலகம் இதனைப் புறந்தள்ளி வருகிறது என்று இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ் கூறினார்.
திருமண வாழ்வில் பத்தாண்டுகள் முதல் அறுபது ஆண்டுகள் வரை தொடர்ந்து இணைந்து வாழும் 530 தம்பதியருக்கு வெஸ்ட் மின்ஸ்டர் பேராயலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாத் திருப்பலியை நிறைவேற்றிய பேராயர் நிக்கோல்ஸ், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
நமது அன்பு உறவுகள் வளர்வதற்கு நீண்ட காலம் தேவை என்பதற்கும், இறைவனின் அன்பு நமது வாழ்வில் நிலையானது என்பதற்கும் நீங்கள் கொண்டுள்ள நீடித்த உறவு சான்று பகர்கிறது என்று பேராயர் நிக்கோல்ஸ் குழுமியிருந்த தம்பதியரைப் பாராட்டிப் பேசினார்.
இஞ்ஞாயிறன்று நாம் கொண்டாடும் தூய ஆவியானவரின் திருநாள் உலகில் அன்பை மீண்டும் வளர்த்து உலகின் முகத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்ற செபத்துடன் தன் மறையுரையை நிறைவு செய்தார் பேராயர் நிக்கோல்ஸ்.








All the contents on this site are copyrighted ©.