2012-05-28 15:56:11

திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை


மே,28,2012. இறைவாக்கினர்கள் வழியாகப் பேசிய தூய ஆவி, இன்றும் உண்மைக்கானப் பாதையில் செயல்படுவோருக்கு, புரிந்துகொள்ளுதல் மற்றும் அறிவின் உண்மையானப் பாதையை காட்டுபவராகச் செயல்படுகிறார் என இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கூறினார் திருத்ததை 16ம் பெனடிக்ட்.
வரும் அக்டோபர் மாதம் ஏழாம் தேதி உலக ஆயர் பேரவையின் கூட்டத்துவக்கத்தின்போது, புனிதர்கள் அவிலாவின் ஜான் மற்றும் Bingenன் Hildegard ஆகியோரை திருஅவையின் மறைவல்லுனர்களாக அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை.
வெவ்வேறு காலக்கட்டத்திலும் வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியிலும் வாழ்ந்த இப்புனிதர்கள், விசுவாசத்தின் மிக உன்னத சாட்சிகளாக விளங்கினார்கள் என்ற பாப்பிறை, இறைவெளிப்பாடுகளைப் புரிந்துகொண்டு இவ்வுலகோடு அறிவுப்பூர்வ உரையாடலை நிகழ்த்தியவர்கள் இவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.
விசுவாச ஆண்டு துவக்கப்பட உள்ளதற்கு முந்தைய நாள் இடம்பெறும் இந்த உலக ஆயர் மன்றக் கூட்டம், புதிய நற்செய்தி அறிவிப்புத் திட்டங்கள் குறித்து விவாதிக்க உள்ள வேளையில், புனிதர்கள் அவிலாவின் ஜான் மற்றும் Bingenன் Hildegard ஆகியோரை திருஅவையின் மறைவல்லுனர்களாக அறிவிக்க உள்ளது முக்கியத்துவம் நிறைந்த ஒன்றே எனவும் ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.