2012-05-26 15:55:13

கிறிஸ்துவின் உயிர்ப்பைப் போற்றும் விதத்தில் உலகெங்கும் செல்லவிருக்கும் மரச்சிலுவையைத் திருத்தந்தை ஆசீர்வதித்தார்


மே26,2012. 2033ம் ஆண்டில் சிறப்பிக்கப்படவிருக்கும் கிறிஸ்துவின் உயிர்ப்பின் இரண்டாயிரமாம் ஆண்டை முன்னிட்டு உலக நாடுகளின் தலைநகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வரும் நீண்ட மரச்சிலுவையை இப்புதனன்று ஆசீர்வதித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
13 அடி உயரம் கொண்ட இத்திருச்சிலுவை, கடவுளுக்கு நன்றி செலுத்துவதன் அடையாளமாக இருக்கின்றது என்று திருப்பீடச்சார்பு தினத்தாள் L’Osservatore Romano கூறியது.
புனித பேதுரு, புனித ஜான் இலாத்தரன், புனித மேரி மேஜர், புனித பவுல் ஆகிய உரோம் பசிலிக்காக்களுக்கும், உக்ரேய்ன், போலந்து, லாத்வியா, எஸ்டோனியா, ஃபின்லாந்து, நார்வே, டென்மார்க், சுவீடன், ஜெர்மனி, ஐஸ்லாந்து, பிரான்ஸ், ஹாலந்து, பெல்ஜியம், ஆஸ்ட்ரியா, ஹங்கேரி, சுலோவாக்கியா, செக் குடியரசு ஆகிய நாடுகளுக்கும் இத்திருச்சிலுவை ஏற்கனவே எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
உலகின் அனைத்து நாடுகளுக்கும் இத்திருச்சிலுவையை எடுத்துச் செல்லும் முயற்சி, உக்ரேய்ன் நாட்டு லெயோபோலி நகர விசுவாசிகள் குழு ஒன்றால் தொடங்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.