2012-05-25 15:34:15

நீதியுடனும், நேர்மையுடனும் செயல்படக்கூடிய ஒருவரை அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் - தென் கொரிய ஆயர்கள் அழைப்பு


மே,25,2012. தென் கொரியாவில் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் நீதியுடன், நேர்மையுடன் செயல்படக்கூடிய ஒருவரை மக்கள் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தென் கொரிய அரசுத்தலைவர் அகில உலக அரசியல் விடயங்களில் ஈடுபடவேண்டிய ஒருவராக இருப்பதால், ஊழல், பேராசை, அநீதி ஆகிய குறைகளற்ற ஒருவரை அப்பதவிக்குத் தேர்ந்தெடுப்பது மக்களின் கடமை என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.
தென் கொரிய ஆயர்களின் எண்ணங்களை உள்ளடக்கிய ஓர் அறிக்கையைப் பேரவையின் சார்பில் செயலர் அருள்தந்தை Thaddaeus Lee Ki-shelf, Fides செய்தி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார்.
“உங்கள் ஒவ்வொரு குலத்திலும் ஞானமும், அறிவாற்றலும், நற்பெயரும் கொண்டவர்களைத் தேர்வு செய்யுங்கள். நான் அவர்களை உங்களுக்குத் தலைவர்களாக ஏற்படுத்துவேன்” (இணைச்சட்டம் 1: 13) என்று விவிலியத்தின் இணைச்சட்ட நூலில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளை தங்கள் அறிக்கையில் மேற்கோளாகக் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், இன்றைய உலகில் கடவுள் தரும் ஒளியைக் கொண்டு தலைவர்களைத் தேர்ந்தெடுக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.