2012-05-25 15:34:05

சிரியாவுக்குள் புகுந்துள்ள வன்முறை கும்பல்களால் நாட்டின் அமைதிக்கு பெரும் ஆபத்து - Aleppo வின் அப்போஸ்தலிக்க நிர்வாகி


மே,25,2012. சிரியாவின் அமைதியைக் குலைப்பதற்கு வேற்று நாடுகளிலிருந்து அந்நாட்டுக்குள் ஊடுருவியிருக்கும் வன்முறை கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன என்று Aleppo வின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giuseppe Nazzaro கூறினார்.
லிபியா, துனிசியா, துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து சிரியாவுக்குள் புகுந்துள்ள வன்முறை கும்பல்களும் அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கும் அமைப்புக்களும் சிரியாவின் அமைதிக்கு பெரும் ஆபத்தாக அமைந்துள்ளன என்று ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் ஆயர் Nazzaro கூறினார்.
சிரியாவில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே அமைதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், அமைதியை விரும்பாத பிற நாட்டு வன்முறை கும்பல்கள் சிரியாவில் குழப்பங்களை உருவாக்கி வருகின்றன என்று ஆயர் Nazzaro குற்றம் சாட்டியுள்ளார்.
வன்முறைகள் தொடர்வதால், நாட்டில் கிடைக்க வேண்டிய மருத்துவ உதவிகளும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறதென்றும் ஆயர் Nazzaro குறை கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.