2012-05-24 15:53:19

கவிதைக் கனவுகள் .... மனம் அறிய


தனது எதிர்காலம் பற்றி அறிய
ஆசைப்பட்டார் மன்னர் ஒருவர்
அழைத்தார் அரண்மனை ஜோதிடர்களை
நிர்ணயித்துச் சொல்லச் சொன்னார்
தனது எதிர்காலத்தை.
வந்தார் முதல் ஜோதிடர்
ஆராய்ந்தார் பலமுறை
சொன்னார் மன்னரிடம்.
“வேந்தே!
உமது வீட்டு உறுப்பினர்கள் எல்லாரும்
உமக்கு முன்னரே இறந்து விடுவார்கள்.
உங்கள் கையாலே அவர்களுக்கு இறுதிச் சடங்குகள்
செய்ய வேண்டியிருக்கும்”.
இந்த வருங்கால முன்னறிவிப்பைக் கேட்டதுதான் தாமதம்
அழைத்தார் மன்னர் காவலர்களை.
சிறையில் அடைக்கச் சொன்னார் ஜோதிடரை.
இரண்டாவது ஜோதிடரை அழைத்தார் மன்னர்
அதே கேள்வியை மீண்டும் கேட்டார்.
“மன்னவா! உங்களது வருங்காலம் ஓகோ என்று இருக்கும்.
உங்கள் வீட்டில் உள்ளவர்களைவிட
உங்களது ஆயுள்காலம் நீண்டது.
அவர்களைவிட நீங்கள் நீண்டநாள்கள் வாழ்வீர்கள்”.
மன்னரின் பாராட்டைப் பெற்றார் இரண்டாவது ஜோதிடர்.
இருவரின் ஜோதிடமும் ஒன்றே, ஆனால்
சொன்ன முறையில் மாற்றம் இருந்தது.
ஓர் உண்மையையும் சொன்னது இந்நிகழ்வு
மனிதர், பாராட்டை முன்னமும்,
விமர்சனத்தைப் பின்னமும்
ஏற்கின்றார்கள்.








All the contents on this site are copyrighted ©.