2012-05-24 16:02:02

கடந்த 24 ஆண்டுகளில் முதன்முறையாக தனது நாட்டைவிட்டு வெளிநாடு செல்லவிருக்கிறார் Aung San Suu Kyi


மே24,2012. மியான்மார் சனநாயக ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் Aung San Suu Kyi, கடந்த 24 ஆண்டுகளில் முதன்முறையாக அடுத்த வாரத்தில் தனது நாட்டைவிட்டு வெளிநாடு செல்லவிருக்கிறார்.
இம்மாதம் 30 முதல் ஜூன் 1 வரை தாய்லாந்து நாட்டு பாங்காக்கில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்கெனச் செல்லவிருக்கிறார் Suu Kyi.
மியான்மாரில் மக்களாட்சி ஏற்படுவதற்காக அமைதியான முறையில் போராடியதற்காக ஏறத்தாழ 15 ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்தவர் சு சி. 66 வயதாகும் இவர் வருகிற ஜூனில் ஆஸ்லோ சென்று 1991ம் ஆண்டில் தான் பெற்ற அமைதி நொபெல் விருதுக்கான உரை வழங்குவார். ஜூன் 21ம் தேதியன்று பிரிட்டன் நாடாளுமன்றத்தின் விருந்தினராக உபசரிக்கப்படுவார்.








All the contents on this site are copyrighted ©.