2012-05-21 15:04:08

திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை


மே 21,2012. வானுலகம் குறித்த வாக்குறுதியையும், இவ்வுலக செபத்தின் வல்லமையையும் கிறிஸ்தவர்களுக்கு நினைவூட்டுவதாக இயேசுவின் விண்ணேற்றம் உள்ளது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இயேசுவின் விண்ணேற்றத் திருவிழாவான இஞ்ஞாயிறன்று தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளோடு இணைந்து அல்லேலூயா வாழ்த்தொலி செப வேளையில், உரை வழங்கிய திருத்தந்தை, வானுலகம் நோக்கி எழுந்துச் சென்ற இயேசு தன் மனிதத்தன்மையில் நம் மனித நிலைகளையும் இறைவனை நோக்கி எடுத்துச் சென்றதன் வழி, நம் இவ்வுலக வாழ்வின் நோக்கம் இறைவனைச் சென்றடைவதே என்பதை காண்பித்துள்ளார் என்றார்.
எவ்வாறு இயேசு நமக்காக இவ்வுலகிற்கு இறங்கி வந்து துன்புற்றாரோ, அவ்வாறே நமக்காகவே அவர் வானுலகம் நோக்கி எழுந்துச் சென்றார் என்ற பாப்பிறை, இயேசு மனுவுரு எடுத்தத்தில் துவங்கிய மீட்பு, அவரின் விண்ணேற்றத்தில் தன் நிறைவைக் கண்டது என்றார். நம் மனிதத்தன்மை இயேசுவின் வழி இறைவனை நோக்கிச் சென்றுள்ளதால், நாம் ஒவ்வொரு முறை செபிக்கும்போதும் இவ்வுலகம் வானுலகோடு இணைகிறது என மேலும் கூறியதிருத்தந்தை, தூபமிடும்போது புகை மேல்நோக்கிச் செல்வது போல் நம் செபமும் இறைவனை அடைந்து பதிலுரை வழங்கப்படுகிறது என்றார்







All the contents on this site are copyrighted ©.