2012-05-21 15:08:23

தமிழகத்தில் வறியவர் விகிதம் அறிவிப்பு


மே 21,2012. தமிழகத்தில் உள்ள மக்கள்தொகையில், வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள், 22.5 விழுக்காடு எனவும், இது, தேசிய சராசரி அளவை விட, 5 விழுக்காடு குறைவு எனவும் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மக்கள்தொகை, 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 7கோடியே 21 இலட்சம் எனவும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் 22.5 விழுக்காடு எனவும், கல்வியறிவு 80.33 விழுக்காடு எனவும், குழந்தைகள் இறப்பு விகிதம் 1,000 குழந்தைகளுக்கு 28 எனவும், சராசரி ஆயுட்காலம் 66.2 ஆண்டுகள் எனவும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய அளவில் விகித நிலைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எல்லா நிலைகளிலும் தமிழகம் மேம்பாடு கொண்டிருப்பதாகவும் இவ்வறிக்கை வழி தெரிய வந்துள்ளது







All the contents on this site are copyrighted ©.