2012-05-19 15:21:56

கொலம்பியாவில் நீதியின்றி அமைதி இல்லை - ஆயர்


மே19,2012. கொலம்பியா நாட்டின் அழகு ஒருபுறமிருக்க, வன்முறை, ஆயுதப்போராட்டம், கடத்தல்கள், பலரின் உயிரிழப்பு என அந்நாடு நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளின் வரலாற்றை கொண்டுள்ளது என்று ஆயர் ஒருவர் கவலை தெரிவித்தார்.
“இறைவன் எங்கே அழுகிறார்” என்ற வார நிகழ்ச்சிக்காகப் பேட்டியளித்த Girardota ஆயர் Guillermo Orozco Montoya, போதைப்பொருள் வியாபாரம், கெரில்லாக்கள், வேலைவாய்ப்பின்மை, கட்டாயப் புலப்பெயர்வு போன்ற சில பிரச்சனைகளுக்கு எதிராக அந்நாடு பல ஆண்டுகளாகப் போராடி வருகிறது என்று கூறினார்.
கொலம்பியாவில் நீதியின்றி அமைதி இல்லை என்றும் ஆயர் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.