2012-05-18 15:48:04

OPAM கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனத்திற்குத் திருத்தந்தை வாழ்த்து


மே 18,2012. உலகில் மிகவும் பின்தங்கிய நாடுகளில் கல்வியறிவை வளர்ப்பதற்கு முயற்சித்து வரும் ஓர் இத்தாலிய கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனத்தின் பணிகளை ஊக்குவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
OPAM என்ற இத்தாலிய கத்தோலிக்க அரசு-சாரா நிறுவனம் உருவாக்கப்பட்டதன் 40ம் ஆண்டை முன்னிட்டு, அந்நிறுவனத்தின் தலைவர் பேரருட்திரு Aldo Martini விற்குத் திருத்தந்தையின் சார்பில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே அனுப்பியத் தந்திச் செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்த OPAM நிறுவனத்தின் 40ம் ஆண்டை முன்னிட்டு இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றும் இவ்வெள்ளியன்று உரோம் நகரில் தொடங்கியுள்ளது. “வலுவற்ற மனித சமுதாயம் : உலகின் தெற்கிலிருந்து பாடங்கள்” என்ற தலைப்பில் இக்கருத்தரங்கு நடைபெற்று வருகிறது.
தென் அமெரிக்க நாடான Venezuela வில் 5 ஆண்டுகள் மறைப்பணியாற்றிய பின்னர் இத்தாலி திரும்பிய அருட்பணி Carlo Muratore என்பவர், எந்தவிதமான வளர்ச்சிக்கும் கல்வியே அடிப்படை என்பதில் உறுதியாயிருந்து 1972ம் ஆண்டு இந்த OPAM நிறுவனத்தை ஆரம்பித்தார்.







All the contents on this site are copyrighted ©.