2012-05-16 15:35:22

மேற்கு ஆப்ரிக்காவுக்கு தென் கொரிய காரித்தாஸ் அனுப்பியுள்ள 2,50,000 டாலர்கள்


மே,16,2012. ஒன்றும் செய்யாமல் நின்று, குழந்தைகள் பட்டினியால் இறப்பதைக் காண எங்கள் மனசாட்சி இடம்தரவில்லை என்று தென்கொரிய காரித்தாஸ் தலைவர் Shin கூறினார்.
மேற்கு ஆப்ரிக்காவில் 1 கோடியே 20 இலட்சம் மக்கள் உணவுப் பற்றாக்குறையால் இறக்கும் சூழல் உருவாகியிருப்பதைத் தடுக்க தென்கொரிய காரித்தாஸ் அப்பகுதிக்கு 2,50,000 டாலர்கள், அதாவது, 1 கோடியே 25 இலட்சம் ரூபாய் அவசர நிதி உதவியாக அனுப்பியுள்ளது.
மேற்கு ஆப்ரிக்காவில் நிலவும் வறட்சியும், உலகில் எல்லா நாடுகளிலும் உணவு விலை கூடியிருப்பதும் இந்தப் பட்டினிச் சாவுகளுக்கு முக்கிய காரணங்கள் என்று காரித்தாஸ் தலைவர் Shin ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
லிபியாவில் நடைபெற்ற போராட்டங்களால் அங்கிருந்து வெளியேறிய புலம்பெயர்ந்தோர் Niger, Burkina Faso, Senegal, Chad ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளது இந்தப் பிரச்னையை இன்னும் அதிகரித்துள்ளது என்று Shin சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.