2012-05-15 15:33:06

இயற்கை வளங்களைக் காக்கும் முறையில் முன்னேற்றம் காணும் கூட்டுறவு’: Brisbane நகரில் கருத்தரங்கு


மே,15,2012. இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் முறையில் மனித குலத்தின் முன்னேற்றம் அமையும் வழிகளை ஆராயும் கடமை நம் அனைவருக்கும் உண்டு என்று ஐ.நா.வின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
வருகிற ஜூன் மாதம் Rio+20 அகில உலக உச்சி மாநாட்டிற்கு ஒவ்வொரு நாடும் தயாரித்து வரும் வேளையில், மனித குலத்தின் முன்னேற்றம், இயற்கை வளங்களை மேலும் அழிக்கும் போக்கில் வளர்வதைத் தடுக்கும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்று ஐ.நா. அதிகாரி Sha Zukang, ஆஸ்திரேலியாவின் Brisbane நகரில் நடைபெறும் ஒரு கருத்தரங்கில் கூறினார்.
‘இயற்கை வளங்களைக் காக்கும் முறையில் முன்னேற்றம் காணும் கூட்டுறவு’ என்ற மையக் கருத்துடன் Brisbane நகரில் இத்திங்களன்று துவங்கிய ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய Sha Zukang, இன்றைய தலைமுறையினரை மட்டும் மனதில் வைத்து நாம் திட்டங்களைத் தீட்டுவது பயனற்றது என்று வலியுறுத்தினார்.
அண்மையில் வெளியான ஒரு ஐ.நா. அறிக்கையில், 2030ம் ஆண்டில் உலகின் உணவுத் தேவை இன்னும் 50 விழுக்காடும், எரிசக்தியின் தேவை இன்னும் 40 விழுக்காடும், தண்ணீர் தேவை இன்னும் 30 விழுக்காடும் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.