ஆசியா மற்றும் பசிபிக் பகுதியின் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தில் உறுதியான தன்மையைக்
கொண்டுள்ளது – ஐ.நா.
மே 11,2012. ஏற்றுமதியில் சரிவு, முதலீடுகளின் மதிப்பு அதிகரிப்பு போன்ற காரணங்களால்
ஆசியா மற்றும் பசிபிக் பகுதியின் பொருளாதார வளர்ச்சி மீண்டும் ஓராண்டு மந்தமடைந்திருந்தாலும்,
உலக அளவில் இப்பகுதி வேகமாக வளர்ந்து வருகின்றது என்று இவ்வியாழனன்று வெளியான ஐ.நா.வின்
அறிக்கை ஒன்று கூறுகிறது. “ஆசியா மற்றும் பசிபிக் பகுதியின் பொருளாதாரம் மற்றும் சமூக
நிலைப்பாடு 2012” என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட ஆய்வில், இப்பகுதி உலகப் பொருளாதாரத்தில்
உறுதியான தன்மையைக் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 7 விழுக்காடாக
இருந்த இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சி, 2012ம் ஆண்டில் 6.5 விழுக்காடாக உள்ளது, ஆயினும்,
2010ம் ஆண்டில் இவ்வளர்ச்சி 8.9 விழுக்காடாக இருந்தது எனவும் ஐ.நா.அறிக்கை கூறுகின்றது.