2012-05-10 15:35:47

உலகெங்கும் பரவியுள்ள இயேசு சபையினரின் எண்ணிக்கை


மே,10,2012. உலகெங்கும் பணியாற்றும் இயேசு சபையினரின் எண்ணிக்கை 2012ம் ஆண்டு சனவரி முதல் தேதியன்று 17,637 ஆக இருந்தது என்று இயேசு சபையின் தலைமையகம் அறிவித்துள்ளது.
இவ்வியாழனன்று வெளியான இந்தப் புள்ளி விவரங்களின்படி, இயேசு சபையில் இவ்வாண்டு துவக்கத்தில், 12526 குருக்கள், 1470 அருள் சகோதரர்கள் என்றும், குருத்துவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளோர் 2896 பேர், மற்றும் 745 பேர் துறவு வாழ்வில் புதிதாக இணைந்துள்ளவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
உலகெங்கும் பரவியுள்ள இயேசு சபையினர், 84 மாநிலங்களாகவும், 15 சிறு பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுச் செயல்படுகின்றனர்.
தெற்கு ஆசியப் பகுதிகளில் பெருமளவாக, 4036 பேர் இயேசு சபை உறுப்பினர்கள் என்றும், அதற்கு அடுத்தபடியாக, அமெரிக்க ஐக்கிய நாட்டில் 2547 பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் இந்தப் புள்ளிவிவரம் கூறுகிறது.
இயேசு சபையினரின் மொத்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு 296 பேர் குறைவு என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.