2012-05-09 15:39:54

உலகத் தலைவர்களின் முழு ஈடுபாடு இல்லாமல், HIV நோய்கண்ட குழந்தைகளைக் காப்பாற்றுவது மிகவும் கடினம் - ஐ.நா.


மே,09,2012. உலகத் தலைவர்களின் முழு ஈடுபாடு இல்லாமல், HIV நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைக் காப்பாற்றுவது மிகவும் கடினம் என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
HIV நோயினால் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்கும் ஒரு சூழல் 2015ம் ஆண்டுக்குள் உருவாக வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐ.நா.வின் UNAIDS அமைப்பின் இயக்குனர் Michel Sidibé, இப்புதனன்று ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, இவ்வாறு கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் HIV கிருமிகளால் 3,90,000 குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என்றும், HIV மற்றும் AIDS நோயினால் ஒவ்வோர் ஆண்டும் 42,000 பெண்கள் இறக்கின்றனர் என்றும் UNAIDS மேற்கொண்ட ஆய்வொன்று தெரிவிக்கிறது.
பிறக்கும் எந்தக் குழந்தையும் HIV நோயினால் தாக்கப்படாமல் காக்கப்பட வேண்டும் என்ற என்ற இலக்கை 2015ம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என்ற கருத்துடன் ஐ.நா.வின் UNAIDS, “Believe it. Do it.” அதாவது, “நம்புங்கள், நடைமுறைப்படுத்துங்கள்” என்ற முயற்சியை 2011ம் ஆண்டு ஆரம்பித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.