2012-05-04 15:21:29

பிரிட்டனின் ஒரு Ordinariate க்குத் திருத்தந்தை நிதியுதவி


மே 04,2012. பிரிட்டனின் Walsingham Personal Ordinariate க்குத் திருத்தந்தை 2 இலட்சத்து 50 ஆயிரம் டாலர் நிதியுதவி செய்திருப்பது, அம்மறைமவட்டத்தின் வளர்ச்சியில் அவர் கொண்டுள்ள அக்கறையையே காட்டுகின்றது என்று ஆயர் Keith Newton கூறினார்.
Personal ordinariate என்பது ஆங்லிக்கன் திருஅவையிலிருந்து உரோமன் கத்தோலிக்கத் திருஅவையில் இணைகின்றவர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள ஓர் அமைப்பாகும். 2009ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி வெளியிடப்பட்ட Anglicanorum Coetibus என்ற அப்போஸ்தலிக்க ஏட்டின்படி, இந்த Ordinariate ல் இருப்பவர்கள், ஆங்லிக்கன் திருஅவையின் ஆன்மீக மற்றும் திருவழிப்பாட்டுப் பாரம்பரியக் கூறுகளைக் கா்ததுக் கொண்டு கத்தோலிக்கத் திருஅவையில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
Walsingham நமதன்னை Ordinariate, இங்கிலாந்து மற்றும் வேல்சில் நற்செய்திப் பணியை இன்னும் அதிகமாகச் செய்வதற்கு முயற்சித்து வரும்வேளை, திருத்தந்தை அனுப்பியுள்ள இந்த நிதியுதவி, அதன் பணிக்கு ஊக்கமூட்டுவதாய் இருக்கின்றது என்று ஆயர் Newton கூறினார்.
2011ம் ஆண்டு சனவரியில் உருவாக்கப்பட்ட Walsingham Ordinariate ல் சுமார் 1200 பொதுநிலை விசுவாசிகளும் 60 அருட்பணியாளர்களும் உள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.