2012-05-03 14:46:28

பத்துக் குழந்தைகளில் ஒரு குழந்தை நிறைபேறு காலத்திற்கு முன்னதாகப் பிறக்கிறது - ஐ.நா. அறிக்கை


மே,03,2012. உலகில் பிறக்கும் பத்துக் குழந்தைகளில் ஒரு குழந்தை நிறைபேறு காலத்திற்கு முன்னதாகப் பிறக்கிறது என்று ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஐ.நா.அமைப்பின் நாற்பது பிரிவுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அறிஞர்கள் WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் இப்புதனன்று வெளியிடப்பட்டன.
ஒவ்வோர் ஆண்டும் உலகில் 1 கோடியே 50 இலட்சம் குழந்தைகள் பேறுகால நிறைவுக்கு முன்னரே பிறக்கின்றன என்று கூறும் ஐ.நா.அறிக்கையில், இக்குழந்தைகளைக் காக்கும் வழிகள் இன்னும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிறக்கும் குழந்தைகளில் 10 இலட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.
நிறைபேறு காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலான குழந்தைகள் ஆப்ரிக்காவின் சகாராப் பகுதியில் பிறக்கின்றன என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.








All the contents on this site are copyrighted ©.