2012-05-02 15:25:32

மனித வர்த்தகத்தை ஒழிக்க, திருப்பீட நீதி, அமைதி அவை உரோம் நகரில் நடத்தவிருக்கும் கருத்தரங்கு


மே,02,2012. நாடுகளிடையே மனித வர்த்தகத்தைத் தடுக்கவும், மனித வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டோரை மீட்கவும் திருஅவையும், அரசுகளும், மனிதநல அமைப்புக்களும் உறுதி கொண்டுள்ளன என்று இங்கிலாந்து ஆயர் Patrick Lynch கூறினார்.
உலகெங்கும் மனித வர்த்தகத்தை ஒழிக்கும் ஒரு முயற்சியாக, திருப்பீட நீதி, அமைதி அவை வருகிற செவ்வாய், மே மாதம் 8ம் தேதி உரோம் நகரில் நடத்தவிருக்கும் கருத்தரங்கைக் குறித்து பேசிய ஆயர் Lynch இவ்வாறு கூறினார்.
இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள கர்தினால் Peter Turkson அவர்களுக்குத் தன் நன்றியைத் தெரிவித்த இங்கிலாந்து வேல்ஸ் ஆயர் பேரவையின் புலம் பெயர்ந்தோர் பணிக்குழுவின் தலைவர் ஆயர் Lynch, இக்கருத்தரங்கு திருஅவையிலும் உலகிலும் இப்பிரச்சனையைப் பற்றிய பல தெளிவுகளை உருவாக்கும் என்று கூறினார்.
மனித வர்த்தகத்திற்கு உள்ளாக்கப்படும் பல அப்பாவி மக்கள் வன்முறைகளுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும் பலியாகின்றனர் என்று இக்கருத்தரங்கில் பேசவிருக்கும் காவல்துறை உயர் அதிகாரி Kevin Hyland கூறினார்.








All the contents on this site are copyrighted ©.