2012-05-01 15:10:05

மியான்மாரில் சிறுபான்மை சமூகங்களுடன் அமைதியும் ஒப்புரவும் ஏற்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆயர் ரெய்மண்ட்


மே01,2012. மியான்மாரில் சிறுபான்மை இனச் சமூகங்களுடன் அமைதியும் ஒப்புரவும் ஏற்படுவதற்கு அந்நாட்டு அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டு ஆயர் கூறினார்.
மியான்மாரில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு அரசுத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் சேர்ந்து செயல்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டுள்ள வேளை, அந்நாட்டு Banmaw ஆயர் Raymond Sumlut Gam இவ்வாறு கூறினார்.
மியான்மார் இராணுவத்துக்கும் கச்சின் புரட்சியாளர்களுக்கும் இடையே இன்னும் சண்டை இடம் பெற்று வருவதைச் சுட்டிக்காட்டிய ஆயர், நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்துள்ள சமார் எழுபதாயிரம் மக்களில், நாற்பதாயிரம் பேர் Banmaw மறைமாவட்டத்தில் உள்ளனர் என்றும் கூறினார்.
மேலும், மியான்மாருக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பான் கி மூன், அந்நாட்டுக்கு எதிரானப் பொருளாதாரத் தடைகள் அகற்றப்படுமாறு வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது







All the contents on this site are copyrighted ©.