2012-05-01 15:11:01

உலகில் வேலைவாய்ப்பின்மை அதிர்ச்சியூட்டும் விதத்தில் இருக்கின்றது – ஐ.நா.அறிக்கை


மே01,2012. உலகில் வேலைவாய்ப்பின்மை அதிர்ச்சியூட்டும் விதத்தில் இருப்பதாகவும், இந்நிலை விரைவில் சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்க முடியாது எனவும் ILO என்ற உலகத் தொழில் நிறுவனம் அறிவித்தது.
“உலகத் தொழில் அறிக்கை 2012 : சிறந்த பொருளாதாரத்துக்கு சிறந்த வேலைகள்” என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள ILO நிறுவனம், உலகில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் இருந்த நிலையோடு ஒப்பிடும் போது தற்போது சுமார் 5 கோடி வேலைவாய்ப்புகள் மறைந்து விட்டன என எச்சரித்தது.
2016ம் ஆண்டுக்குள் வேலைவாய்ப்பு வசதிகளில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.








All the contents on this site are copyrighted ©.