2012-04-28 14:59:29

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் முதன்முறையாக அனைத்துலக மீட்புப் படை


ஏப்ரல்28,2012. அனைத்துலக மீட்புப் படை என்ற கிறிஸ்தவ அமைப்பு இத்தாலியில் செயல்படத் தொடங்கியதன் 125ம் ஆண்டை முன்னிட்டு, அப்படையின் வரலாற்றில் முதன்முறையாக வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இச்சனிக்கிழமை காலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது என்று திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவை கூறியது.
அனைத்துலக மீட்புப் படையானது இறைவார்த்தையை அறிவித்து, கருணை இல்லங்கள், வீடற்றவர்களுக்கு விடுதிகள், மருத்துவமனைகள், அவசரகால நிவாரணப் பணிகள் எனப் பல்வேறு சமூகநலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையுடன் சில ஆண்டுகளாக நல்ல உறவையும் கொண்டிருப்பதாக அந்த அவை அறிவித்தது.1887ம் ஆண்டு இத்தாலியில் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு, தற்போது சுமார் 121 நாடுகளில் சுமார் 10 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.







All the contents on this site are copyrighted ©.