2012-04-23 15:53:26

நிலக்கண்ணி வெடிகளை ஒழிப்பது என்ற முடிவு மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய ஓர் அவசரமான முடிவு - அமெரிக்க ஆயர்கள்


ஏப்ரல்,23,2012. நிலக்கண்ணி வெடிகளை முற்றிலும் ஒழிப்பது என்ற முடிவு மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய ஓர் அவசரமான முடிவு என்று அமெரிக்க ஆயர்கள் அரசுத் தலைவர் பாரக் ஒபாமாவுக்கும், அமெரிக்க அரசுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நிலக்கண்ணி வெடிகளை உலகிலிருந்து முற்றிலும் அகற்ற 1977ம் ஆண்டு உருவான உலக உடன்பாட்டில் சேராத 37 நாடுகளில் அமெரிக்க அரசும் ஒன்று.
இந்த உடன்பாட்டில் இணைவதா வேண்டாமா என்ற வாதத்தை அமெரிக்க அரசு 2009ம் ஆண்டு தன் பாராளுமன்றத்தில் துவக்கியது. இந்த வாதங்களின் இறுதிக் கட்டம் தற்போது நெருங்கி வருவதால், அமெரிக்க ஆயர்கள் ஒபாமா அரசுக்கு இந்த வேண்டுகோளை அனுப்பியுள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டைத் தவிர NATO அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் உட்பட, உலகின் 161 நாடுகள் நிலக்கண்ணி வெடிகளை முற்றிலும் ஒழிக்கும் உலக உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.
அமெரிக்க ஆயர்கள் அனுப்பியுள்ள இந்த வேண்டுகோளில் அமெரிக்காவின் எவான்ஜெலிக்கல் லூத்தரன் சபை, மெதடிஸ்ட் சபை, பிரஸ்பிடேரியன் சபை என்ற பல்வேறு அமைப்புக்களும் கையெழுத்திட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.