2012-04-23 15:57:32

தமிழகத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை, 17 விழுக்காடு வீழ்ச்சி


ஏப்ரல் 23, 2012. தமிழகத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை, ஏறத்தாழ 17 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளதாக "அபாக்ஸ்' என்ற இந்திய ஊடக விளம்பரங்களைச் சந்தைப்படுத்துவோருக்கான நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தொலைக்காட்சி பார்த்தவர்களின் எண்ணிக்கை, அதற்கு முந்தைய மாதம் பார்த்தவர்களை விட 17 விழுக்காடு வீழ்ச்சி கண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய வீழ்ச்சிக்கு, தொடர் மின்வெட்டும், அறிவிக்கப்படாத மின்வெட்டும் முக்கிய காரணங்களாக இருப்பதாக இவ்வாய்வு தெரிவிக்கிறது.
ஆட்சி மாற்றம், அரசியல் திருப்பங்கள் போன்றவை, பொழுதுபோக்கு அலைவரிசைகளில் இருந்து, மக்களின் கவனத்தை, செய்தி அலைவரிசைகள் பக்கம் திருப்பியுள்ளதும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.