2012-04-20 15:35:50

மெக்சிகோவில் ஏழாவது உலக சுற்றுலா மாநாடு


ஏப்.20,2012. “மாற்றத்தைக் கொணரும் சுற்றுலா” என்ற தலைப்பில் இம்மாதம் 23 முதல் 27 வரை மெக்சிகோ நாட்டு Cancún ல் ஏழாவது உலக சுற்றுலா மாநாட்டை நடத்தவுள்ளது திருப்பீட சுற்றுலா அவை.
மெக்சிகோ ஆயர் பேரவையின் ஒத்துழைப்புடன் குடியேற்றதாரர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர்க்கான திருப்பீட மேய்ப்புப்பணி அவை நடத்தும் இம்மாநாட்டில் நான்கு கண்டங்களின் 40 நாடுகளிலிருந்து சுமார் 200 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 ஆப்ரிக்க நாடுகள், 16 அமெரிக்க நாடுகள், 6 ஆசிய நாடுகள், 13 ஐரோப்பிய நாடுகள் என இம்மாநாட்டில் பங்கு பெறும் பிரதிநிதிகள், சுற்றுலாக்களின் பல்வேறு கூறுகள் குறித்து கலந்துரையாடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
UNWTO என்ற ஐ.நா.வின் சுற்றுலா நிறுவனத்தின் கணிப்புப்படி, 2011ம் ஆண்டில் உலக அளவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4.4 விழுக்காடு அதிகரித்தது என்றும் ஏறக்குறைய 98 கோடி மக்கள் சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டனர் என்றும் தெரிய வந்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.